தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான இலட்சியமான ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதை விட்டு வெகுதூரமாக பன்னெடுங்காலமாக இருந்து வந்தனர். அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற மாபாதக செயலில் மூழ்கிக் கிடந்தனர். இஸ்லாத்தின் அடிப்படை எது என்று புரியாமல் இருளில் தவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் உள்ள மக்களின் பரிதாபகரமான நிலையை உணர்ந்து, அவர்களை நரக விழும்பிலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தின் பால் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாத்தின் தூய வடிவை தெரிய வேண்டூமானால் குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற உண்மையை எடுத்துக்கூறி மக்களை தூய இஸ்லாத்தின் பால் அழைக்க வேண்டும் என்ற மகத்தான பணிக்காக உருவாக்கப்பட்டது தான் "ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்"